குட் நியூஸ்..! தமிழகத்தில் 8 சிறிய துறைமுகங்கள் அமைக்க திட்டம்..!
தமிழ்நாட்டில் பெரும் வாணிபங்கள் கடல் வழியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அளவுக்கு மாற்றும் வகையில் அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தொழில்துறையின் மூலமாக மேற்கொள்ளப்படும் உற்பத்திகளை தங்கு தடை இல்லாமல் கொண்டு செல்வதற்கு சிறிய துறைமுகங்கள் முதல் பெரிய துறைமுகங்கள் வரை அமைக்கும் வகையில் பல்வேறு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில் செங்கல்பட்டு மாவட்டம் முகையூர் மற்றும் பனையூர், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், கடலூர் மாவட்டம் சிலம்பிமங்கலம்,
மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி, நாகை மாவட்டம் விழுந்தமாவடி, தூத்துக்குடி மாவட்டம் மனப்பாடு, குமரி மாவட்ட கடற்கரை பகுதி ஆகிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இந்த துறைமுகங்களை உருவாக்க தனியார் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிறிய துறைமுகங்கள் அமைய உள்ள இடத்தில் கடல் வாணிபத்திற்கு அரபிக் கடல், வங்காள விரிகுடா, தீப கற்ப கடற்கரை நுழைவு வாயிலாக உள்ளது.
யோரத்தில் போதுமான ஆழம், முழு கடற்கரையோரத்திலும் நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே இணைப்பு பாதைகள் உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக சிறந்த வல்லுநர்கள் மற்றும் திறமையான மனிதவளம் உள்ள சிறப்பு அம்சம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பங்களிப்புடன் வணிக துறைமுகங்களை ஊக்குவித்தல், துறைமுகத் துறையில் சாத்தியமான முதலீட்டாளர்களுக்கு 30 ஆண்டுகள் முதல் 99 ஆண்டுகள் வரை நீண்ட கால குத்தகை காலம் வழங்கப்படும். தொழில்துறைக்கு உகந்த நெகிழ்வான துறைமுகக் கொள்கை வகுக்கப்படும்.
கடலோர சுற்றுலா, கப்பல் கட்டும் தொழில்கள் & கடல் உணவு பதப்படுத்துதலை ஊக்குவித்தலுக்கு இந்த சிறிய துறைமுகங்கள் பயன்படும் என அரசு அறிவித்துள்ளது.
எனவே தமிழகக் கடற்கரையில் உள்ள ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ள முதலீட்டாளர்களை தமிழ்நாடு கடல்சார் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.