1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! முட்டை கொள்முதல் விலை சரிவு..!

1

நாமக்கல் மாவட்டத்தில் 1,100 எண்ணிக்கையில் சிறிய மற்றும் பெரிய கோழிப் பண்ணைகள் இருக்கின்றன. இந்த கோழிப்பண்ணைகளில் சுமார் 8 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் கிடைக்கின்றன. இந்தியாவில் உற்பத்தியாகும் முட்டைகளில் 95 சதவீதம் நாமக்கல் மாவட்டத்தில்தான் பெறப்படுகிறது.இங்கிருந்து பிற மாநிலங்களுக்கு மட்டும் அல்லாது, வெளிநாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. 

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 555 காசுகளாக இருந்து வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 20 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு 535 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Trending News

Latest News

You May Like