குட் நியூஸ்..! ஒரே வாரத்தில் முட்டை விலை ரூ.2 வரை குறைப்பு..!
முட்டையானது நாமக்கல் மாவட்டத்தில் தான் அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியது நமது கடமை. அதற்கேற்ப காய்கறிகள், முட்டை, பால், பழங்கள் உள்ளிட்டவற்றை நமது அன்றாட உணவு பழக்கத்தில் சேர்த்துக்கொள்ளுவது மிகவும் முக்கியமான ஒன்று.
கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் முட்டை விலை உயர்ந்து ரூ.8 வரை விற்பனையாகிவந்த நிலையில், தற்போது விலை சற்று குறைந்துள்ளது. நாமக்கலில் கொள்முதல் விலையில் 10 காசுகள் குறைந்து ஒரு முட்டை ரூ.5.15க்கு விற்பனையாகிறது. கொள்முதல் விலை குறைந்துள்ளதால், சில்லறை விற்பனையில் ஒரு முட்டை ரூ.5.75 முதல் ரூ.6 வரை விற்பனையாகிறது. ஒரே வாரத்தில் முட்டை விலை ரூ.2 வரை குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.