குட் நியூஸ்..! சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு..!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், சூரியகாந்தி, பாமாயிலுக்கு 20 சதவீதம் ஆக இருந்த இறக்குமதி வரியை 10 விழுக்காடாக குறைத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த இறக்குமதி வரி குறைப்பால், சந்தைகளில் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சமையல் எண்ணெய் வியாபாரிகள் கொடுத்த தகவலின் படி, பாமாயில் ஒரு லிட்டர் . இதன் விலை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ரூ.135 என்ற நிலையில் இருந்த ஒரு லிட்டர் பாமாயில் விலை 10ரூபாய் குறைந்து, ரூ.125 முதல் விற்பனை செய்யப்படுகிறது . இதேபோல், 850 மி.லி. கொண்ட பாக்கெட் பாமாயிலின் விலை ரூ.112-ஆக உள்ளது. இதன் விலை கடந்த வாரத்தில் ரூ.126 என்று விற்பனையாகிறது. நல்லெண்ணெய் விலையும் சற்று குறைந்துள்ளது.
சூரியகாந்தி(சன்பிளவர் ஆயில்) எண்ணெய் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் 850 மி.லி. சூரியகாந்தி எண்ணெய் ரூ.146 முதல் ரூ.155 வரை விற்பனை ஆன நிலையில், தற்போது ரூ.136-ல் இருந்து ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் தேங்காய் எண்ணெய் விலை இன்னும் குறையவில்லை.. கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
மொத்த மார்க்கெட்டில் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு ஒரு லிட்டர் ரூ.260-க்கு விற்பனையானது. ஆனால் தற்போதைய விலை ரூ.400 வரை விற்கப்படுகிறது. வெறும் 45 நாளில் தேங்காய் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.140 உயர்ந்துள்ளது. இன்னும் அதன் விலை உயரும் என்று வியாபாரிகள் கூறினார்கள். தேங்காய் எண்ணெய்க்கான கொப்பரைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், அதன் விலை உயர்வதாக வியாபாரிகள் விளக்கம் அளித்தனர்.