1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இனி பயணிகளிடம் சில்லறையாக கொடுக்க நிர்பந்தம் செய்யக்கூடாது..!

1

மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பேருந்தில் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லறையாக கொடுக்க வேண்டும் என்ற வாக்குவாதத்தில் நடத்துனர்கள் ஈடுபடுவதாக தெரிவித்து பயணிகளிடமிருந்து தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மாநகர் போக்குவரத்து கழக நடத்துனர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது.

  • அதன்படி, மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகள் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லறையாக கொடுக்க வேண்டும் என நடத்துனர்கள் நிர்பந்தம் செய்யக்கூடாது.
  • பயணிகள் கொடுக்கும் பணம் மற்றும் நாணயங்களை பெற்று உரிய மீதித் தொகையை வழங்க வேண்டும்.
  • பணிமனைகளில் பணியின்போது நடத்துனர்களுக்கு வழங்கப்படும் முன்பணம் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும்போது முறையாக பயன்படுத்திட வேண்டும்.
  • பயணிகளிடத்தில் சில்லறை தொடர்பான விவாதங்களை தவிர்த்து கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.

இதுதொடர்பாக புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நடத்துனர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like