1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு..!

1

திருக்கோயில் பணியாளர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் அகவிலைப்படி 46%ஆக உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 42%ஆக அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில் 46%ஆக உயர்த்தியுள்ளது.

ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெறக்கூடிய திருக்கோவில்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் கணக்கிட்டு 46% அகவிலைப்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து சார்நிலை அலுவலர்கள் தமிழக அரசின் அறிவிப்பை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பகுதிநேர, தினக்கூலி, தொகுப்பூதிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like