1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! விரைவில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர போகிறது..!

1

நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு விரைவில் தமிழக அரசு வெளியிட உள்ளது.

 

முன்னதாக மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து மாநில அரசு ஊழியர்களும் தங்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

 

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு குட் நியூஸ் கொடுக்கப் போவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 53 சதவீதத்தில் இருந்து 55 சதவிகிதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு எவ்வளவு இருக்கும் என எதிர்பார்பில் உள்ளனர்.அகவிலைப்படி உயர்வு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டால், இதன்மூலம் தமிழகத்தில் உள்ள 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன் அடைவார்கள்.

இன்று அல்லது நாளை அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அப்படி அகவிலைப்படி உயர்த்தப்பட்டால், கிட்டத்தட்ட 16 லட்சம் அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்கள், 6 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே பழைய ஓய்வூதிய திட்டம் விவகாரத்தினால் நொந்துபோயுள்ள நிலையில், அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியானால், அது அரசு ஊழியர்களுக்கு ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தரும் என்றும் நம்பப்படுகிறது.

Trending News

Latest News

You May Like