1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர போகிறது..!

1

ஆண்டுக்கு இரண்டு முறை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவற்றை மத்திய அரசு திருத்துகிறது. ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகள் முதல் இந்த திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன. அரசாங்கம் அறிவிப்பை எப்போது வெளியிட்டாலும், இந்த தேதிகள் முதல் இவை கணக்கிடப்படுகின்றன.

டிஏ உயர்வுக்காக மத்திய அரசு ஊழியர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஹோலிக்கு முன் அரசு அகவிலைப்படியை 2 சதவீதம் மட்டுமே அதிகரிக்கும் என ஊடக அறிக்கைகளை தெரிவிக்கின்றன. பணவீக்க விகிதத்தின்படி, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் அகவிலைப்படி 2% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் அகவிலைப்படி தற்போது இருக்கும் 53% =இலிருந்து 55% ஆக அதிகரிக்கும். இருப்பினும், இது குறித்த இறுதி முடிவு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும். 

முன்னதாக அக்டோபர் 2024 இல், மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது, இது ஜூலை 1, 2024 முதல் அமலுக்கு வந்ததாகக் கருதப்பட்டது. அந்த உயர்விற்குப் பிறகு, அகவிலைப்படி 50% இலிருந்து 53% ஆக அதிகரித்தது.

அகவிலைப்படி 2% அதிகரித்தால் சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்?

அகவிலைப்படி (DA) 2% அதிகரித்தால், 

- ரூ.18,000 அடிப்படை சம்பளம் உள்ள ஊழியர்களின் சம்பளம் மாதத்திற்கு ரூ.360 அதிகரிக்கும். 

- தற்போது, ​​அவர்கள் 53% அகவிலைப்படியின்படி ரூ.9,540 பெற்று வருகிறார்கள்.

- அகவிலைப்படி 2% அதிகரித்தால், அகவிலைப்படி தொகை ரூ.9,900 ஆக உயரும்.

அகவிலைப்படி 3% அதிகரித்தால், 

- மாத சம்பளம் ரூ.540 அதிகரித்து அகவிலைப்படி தொகை ரூ.10,080 ஆக உயரும். 

- இது ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வை அளிக்கும்.

அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு எப்போது வந்தாலும், அது ஜனவரி 1 ஆம் தேதி மற்றும் ஜூலை 1 ஆம் முதல் அளிக்கப்படுகின்றது. உதாரணமாக இப்போது இந்த வாரம் அறிவிப்பு வந்தாலும், ஜனவரி 2025 முதலான அகவிலைப்படி அரியர் தொகை வழங்கப்படும்.

ஜனவரி 2025 இல், மத்திய அரசு 8வது ஊதியக் குழுவை அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இது அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களில் திருத்தங்களை செய்யும். 7வது ஊதியக் குழுவின் காலம் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைகிறது. 8வது ஊதியக் குழு 2026 முதல் செயல்படுத்தப்படும். இருப்பினும், அரசாங்கம் இன்னும் குழுவை அமைக்கவில்லை.

Trending News

Latest News

You May Like