குட் நியூஸ்..! ஆதார் அட்டை இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு..!!
ஆதார் கார்டை 10 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிப்பது என்பது கட்டாயமாகும். இந்நிலையில், இது தொடர்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ( UIDAI) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, மக்கள் தங்கள் ஆதாரில் உள்ள பெயர், முகவரி போன்றவற்றை எவ்வித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக மாற்றி கொள்வதற்கு இன்று (14.12.2024 ) வரை அனுமதி அளித்து இருந்த நிலையில், மக்களின் நலன் கருதி தற்போது ஆதார் அட்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 14 தேதி வரை நீட்டித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ( UIDAI) அறிவித்துள்ளது.