1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! மருத்துவ பட்டப் படிப்புகளுக்கு மாணவ சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு..!

1

"தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் சுயநிதி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்திற்கும், 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான இணையவழி விண்ணப்பங்கள் (Online Applications) தகுதியான நபர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன" என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் தனித்தனி விண்ணப்பங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், www.tnhealth.tn.gov.inwww.tnayushselection.org ஆகிய இணையதளங்களில் பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான தகவல் தொகுப்பேட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையவழியில் மட்டுமே (Online Applications) விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வேறு எந்த வழியிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.tnhealth.tn.gov.in., www.tnayushselection.org. என்ற இணையத்தளங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை அறிந்துகொள்ளளாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும்முன் அவற்றை முழுமையாகப் படித்து சரியான தகவல்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தேவையான இடங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களின் PDF/JPEG வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பக் கட்டணம், இணையவழி கலந்தாய்வுக் கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் இவை அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும். விண்ணப்பதாரர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

UG ASUH Courses Admission: விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் OC, BC, BCM, MBC/DNC பிரிவினர் என்றால் இணையவழி விண்ணப்பக் கட்டணம் ரூ.500 வசூலிக்கப்படும், SC/SCA, ST பிரிவினருக்கு இதில் விண்ணப்பக் கட்டணம் கிடையாது. அதைத் தொடர்ந்து, அகில் இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும்  அனைத்து பிரிவினருக்கும் ரூ.1000 மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் விண்ணப்பிக்கும் அனைத்து பிரிவினருக்கும் ரூ.1000 வசூலிக்கப்படுகிறது. 

அரசின் சிறப்பு ஒதுக்கீட்டு விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு...

அரசின் சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மற்றொரு விஷயத்தையும் கவனத்தில்கொள்ள வேண்டும். அதாவது, நீங்கள் இணையவழியில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கோரப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை ஆணையர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். அல்லது அஞ்சல் மூலம் அந்த தேதியில் வந்து சேரும்படி அனுப்பிக்க வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு நேர்முகமாக மட்டுமே நடைபெறும் என்றும் விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவிலேயே வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

UG ASUH Courses Admission: நீட்டிக்கப்பட்ட காலக்கெடு

தகவல் தொகுப்பேட்டினைப் பதிவிறக்கம் செய்வதும், இணையவழி விண்ணப்பம் பதிவு செய்வதும் கடந்த ஜூலை 24ஆம் தேதி அன்றே தொடங்கிவிட்ட நிலையில், தகவல் தொகுப்பேட்டினை பதிவிறக்கம் செய்யவும்,  இணையவழி விண்ணப்பம் பதிவு செய்யவும் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 5 மணிவரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

அரசு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க இணையவழி விண்ணப்பத்துடன் அனைத்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களுடன் தபால் / கூரியர் சேவை வாயிலாக சமர்ப்பிக்கவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 5 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like