1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! கோவையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலம் நீலம்பூர் வரை நீட்டிக்கப்படும்..!

Q

கோவையில் கருணாநிதி நினைவு நுாலகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை நேரில் ஆய்வு செய்து வருகிறேன். மாவட்ட வாரியாக ஆய்வை, முதலில் நான் கோவையில் தான் மேற்கொண்டு உள்ளேன். செந்தில் பாலாஜியின் வேகமான செயல்பாடுகளை முடக்க தடைகளை ஏற்படுத்தினார்கள்.
அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த செந்தில் பாலாஜி கம்பேக் கொடுத்து இருக்கிறார். தடைகளை உடைத்து மீண்டு வந்த செந்தில் பாலாஜி கோவை வளர்ச்சிக்கு பாடுபடுகிறார்.
கோவையின் அடையாளமாக செம்மொழிப் பூங்கா மாறும். கோவையில் மாபெரும் நூலகம் 2026ம் ஆண்டு திறக்கப்படும். நூலகம் கம்பீரமாக அமையும். தி.மு.க., ஆட்சியில் ஒரு திட்டத்தை அறிவித்தால், அதை குறிப்பிட்ட காலத்தில் திறந்து வைப்போம். இந்தியாவிலே முதல் வேளாண்மை பல்கலைக்கழகம் கோவையில் தான் தொடங்கப்பட்டது.
* கோவையில் ரூ.126 கோடி மதிப்பில் தங்க நகை விற்பனைக்கான தொழில் வளாகம் கட்டப்படும். தங்க நகை தயாரிப்பாளர்களிடம் கோரிக்கைகளை கேட்ட பின் அறிவிப்பை வெளியிடுகிறேன். நகை தொழில் வளாகம் அமைப்பதன் மூலம் 3500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
* கோவையில் மேலும் ஒரு தகவல் தொழில்நுட்ப வளாகம் கட்டப்படும்.
* கோவை கிரிக்கெட் மைதானம் கட்ட விரைவில் பணிகள் துவங்கப்படும்.
* ரூ.1,848 கோடியில் விமான நிலைய விரிவாக்க பணிகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* கோவையில் விளை நிலங்களை ஒட்டிய இடங்களில் யானை போகாத நவீன வேலிகள் அமைக்கப்படும்.
* கோவை அவிநாசி ரோட்டில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலம், நீலம்பூர் வரை 600 கோடி ரூபாயில் நீட்டிக்கப்படும்.
ஒவ்வொரு தனிமனிதரின் கவலையை போக்கும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. மக்களின் வாழ்க்கையோடு திராவிட மாடல் அரசு திட்டங்கள் கலந்து இருக்கிறது. வாக்களித்தவர்கள், வாக்களிக்க மறந்தவர்கள், வாக்களிக்க மனம் இல்லாதவர்கள் என்கிற எந்த வேறுபாடும் பார்க்காமல், அனைத்து மக்களுக்குமான அரசாக நாம் செயல்பட்டு இருக்கிறோம். இதனால் தான் மக்கள் தொடர்ந்து தி.மு.க.,வை ஆதரித்து கொண்டு இருக்கிறார்கள்.

Trending News

Latest News

You May Like