1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! 9 மாவட்டங்களில் புதிய தோழி விடுதிகள் - முதலமைச்சர் அறிவிப்பு..!

Q

தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏழை, எளிய மகளிரின் மகிழ்ச்சிதான் திராவிட மாடல் அரசு என்றார்.

 

காஞ்சிபுரம், ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, தேனி, கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் ரூ. 72 கோடியில் 700 படுக்கைகளுடன் புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

 

மகளிர் தின விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "விழாவிற்கு வந்துள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.. நாளும் கிழமையும் நலிந்தோருக்கில்லை... ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கு இல்லை என்பார்கள். பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை என்பதை உணர்ந்த ஆண்கள் நாங்கள்.

பெண் விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் பெரியார். திராவிட இயக்கத்தின் பேதமே ரத்த பேதம், பால் பேதம் இல்லை என்பதாகும். பெரியார் வழி வந்த அண்ணா, சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கினார்.

பெண்கள் கடமையை செய்ய மட்டும் பிறந்தவர்கள் அல்ல..உரிமையை பெறவும் பிறந்தவர்கள். 9 மாவட்டங்களில் 72 கோடி மதிப்பில் 700 படுக்கை வசதிகளுடன் தோழி விடுதிகள் அமைய உள்ளன. இதன்படி காஞ்சிபுரம், ஈரோடு, சிவகங்கை, தருமபுரி, கரூர், தேனி, கடலூர், ராணிப்பேட்டை, நாகை ஆகிய மாவட்டங்களில் தோழி விடுதிகள் அமைக்கப்படும்.

பெண்களின் உரிமையை உறுதி செய்யும் ஆட்சியாக தி.மு.க செயல்படுகிறது. ஆணாதிக்க மனோபாவம் குறைய வேண்டும். பெண்கள் கடமையை செய்ய மட்டும் பிறந்தவர்கள் அல்ல..உரிமையை பெறவும் பிறந்தவர்கள்" என்று அவர் கூறினார்.

சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை சார்பில் கடந்த ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட மகளிர் 'பிங்க் ஆட்டோ' திட்டத்தை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 'உலக மகளிர் தின விழா' நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 250 பெண் ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, சென்னையில் 'பிங்க் ஆட்டோ' சேவையை வழங்கினார். இவர்களுக்கு ஆட்டோக்கள் வாங்க ஒரு லட்சம் ரூபாய் வரை அரசு மானியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

Trending News

Latest News

You May Like