குட் நியூஸ்..! விரைவில் மாநிலம் முழுவதும் தடுப்பணைகள் கட்டப்படும்: சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் தகவல்..!

நேற்றைய சட்டசபை கூட்டத்தில், குளித்தலை, உத்தரமேரூர், பேராவூரணி, எம்எல்ஏ.,க்கள் அவரவர் தொகுதிகளில் தடுப்பணைகள் குறித்து கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன்;
பல்வேறு உறுப்பினர்கள் பலர் இந்த கோரிக்கையை முக்கியமாக வைக்கின்றனர். தடுப்பணைகள் கட்டுவது குறித்து எவை சாதகமாக உள்ளது என்பது குறித்து முதல்வருடன் பேசி வருகிறேன். தமிழகம் முழுவதும் இன்னும் 2 ஆண்டுகளில் தேவையான தடுப்பணைகள் கட்டித்தரப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
ராமநாதபுரம் அருகே வைகே ஆற்றில் கருவேலம் மரங்கள் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், இது குறித்து தனியாக ஒரு மனு கொடுத்தால் முடிந்த அளவுக்கு செய்து தருகிறேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.