1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! GSTயால் சரியும் சிமெண்ட் செங்கல் விலை..!

1

வீடு கட்ட அவசியமாகத் தேவைப்படும் செங்கலுக்கும் 12% இருந்த வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம், சிறிய அளவில் வீடு கட்டும் பொதுமக்களுக்கு மிகுந்த நிவாரணமாக இருக்கும்.அதேபோல சிமெண்டுக்கு 28% ஜி.எஸ்.டி.வரி இருந்தது. தற்போது அது 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு பை சிமென்டின் விலையில் நிச்சயம் குறைவு ஏற்படும்.

மேலும், மண் மற்றும் சுண்ணாம்பு கலவை கற்களுக்கு முன்பு 12% வரி இருந்தது. தற்போது அது 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், கிரானைட், மார்பிள் போன்ற கற்களுக்கும் இதேபோன்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது. 12% இருந்த ஜி.எஸ்.டி. 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சமையலறை, ஹால், அலங்கார வேலைகளுக்காக பயன்படுத்தப்படும் கற்களின் விலையும் குறைய வாய்ப்பு உள்ளது.

பெயிண்ட் மற்றும் டைல்ஸ் போன்ற பொருட்களுக்கு ஏற்கனவே 18% வரி இருந்தது. அந்த வரி குறையாமல் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

. மொத்தத்தில் செங்கல், சிமெண்டு, கல் போன்ற அடிப்படைப் பொருட்களில் கிடைத்த தள்ளுபடிகள், வீடு கட்டத் திட்டமிடும் குடும்பங்களுக்கு உதவியாக இருக்கும். 

Trending News

Latest News

You May Like