1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! விரைவில் ரயில் தண்டவாளம் அருகே, 'சிசிடிவி கேமரா'..!

Q

சமீப காலமாக, ரயில்கள் மீது கற்கள் வீசுவது, ரயில் பாதையில் கற்கள், டயர் வைப்பது, சிக்னலை உடைக்க முயற்சி போன்ற சதி வேலைகள் நடக்கின்றன.
ரயில் பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்ய, ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வு செய்து, 50 இடங்களை தேர்வு செய்துள்ளது. அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது:
ரயில்களில் வழக்கமாக நடக்கும் திருட்டுகள், கடத்தல்களை தடுக்கும் வகையில், பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சமீப காலமாக, ரயில் பாதைகளில் சிலர் சதி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் நடந்த சம்பவங்களில், சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், பெரும்பாலானோர் போதை ஆசாமிகளாக இருந்தனர்.
ரயில்வே பாதுகாப்பு படை நடத்திய ரகசிய ஆய்வில், அதிக குற்றங்கள் நடக்கும், 50 இடங்களை தேர்வு செய்துள்ளோம். அங்கு ரயில் தண்டவாளம் அருகே, 'சிசிடிவி கேமரா' பொருத்த முடிவு செய்துள்ளோம்.
சென்னை பேசின்பிரிட்ஜ், கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, காட்பாடி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, விழுப்புரம், திருவாரூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், காரைக்குடி; கேரளா மாநிலத்தில் திரூர், சொர்னுார் உள்ளிட்ட 50 இடங்களில், ரயில் தண்டவாளம் அருகே கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
தற்போது, பேசின்பிரிட்ஜ் சந்திப்பு அருகில், 10க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Trending News

Latest News

You May Like