1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! விரைவில் அனைத்து மருந்து கடைகளிலும் சிசிடிவி கேமரா..!

1

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் -1940 மற்றும் -1945 அட்டவணை “X ” மற்றும் “H”,”H1″ ‘ Drugs ” குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்து கடைகளிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் -1973 பிரிவு 133-ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு  (05.03.2024) நாளில் இருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள், ஆய்வின் போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது உரிய சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Trending News

Latest News

You May Like