1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! 500க்கும் மேற்பட்ட சேனல்கள் மற்றும் பல ஓடிடி தளங்களை அளிக்கும் பிஎஸ்என்எல் தடாலடி சேவை...!

1

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு கடந்த சில மாதங்களாகவே வாடிக்கையாளர்கள் படிப்படியாக உயர்ந்து வருகின்றனர். 8.5 லட்சம் பயனர்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை தேர்வு செய்துள்ளனர். 

அந்த வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் முதல் இணைய தொலைக்காட்சி சேவையை நாட்டில் தொடங்கி உள்ளது. IFTV என்றழைக்கப்படும் இந்த தொலைக்காட்சி நிறுவனம் பைபர் மூலம் இந்த சேவையை வழங்குகிறது. இருப்பினும் இந்த சேவையை தமிழ்நாட்டிலும், மத்திய பிரதேசத்தில் மட்டும் பிஎஸ்என்எல் தற்போது தொடங்கியிருந்தது. இது பஞ்சாப் மாநிலத்திற்கும் தற்போது விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த இணைய தொலைக்காட்சி சேவையை வழங்குவதற்காக பிஎஸ்என்எல், Skypro என்ற நிறுவனத்துடன் கைக்கோர்த்துள்ளது. இது இணைய தொலைக்காட்சி சேவையை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கிறது. பிஎஸ்என்எல் மற்றும் Skypro நிறுவனம் இணைந்து நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு தரமான மற்றும் சிறந்த நவீன தொலைக்காட்சி மற்றும் இணைய அனுபவத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. 

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்களின் ஸ்மார்ட் டிவியில் Skypro TV செயலியின் வாயிலாக IPTV தளத்தின் மூலம் IFTV வசதியையும் பெற்றுக்கொள்ளலாம். இதன்மூலம், 500க்கும் மேற்பட்ட HD, SD சேனல்களை பார்க்கலாம். இதற்கு கூடவே 20க்கும் மேற்பட்ட பிரபல ஓடிடி சேவைகளையும் பெறலாம். இதற்காக தனியே செட்ஆப் பாக்ஸ் வாங்க வேண்டிய தேவையில்லை. இதில் Zee, Star, Colors போன்ற தொலைக்காட்சி நெட்வோர்க்களின் சேனல்களையும் நீங்கள் பிஎஸ்என்எல் பைபர் இணைய சேவையை வைத்திருப்பதன் மூலம் காணலாம். 

Trending News

Latest News

You May Like