குட் நியூஸ்..! மினிமம் பேலன்ஸ் அபராத தொகை வசூலிப்பை கைவிட வங்கிகள் முடிவு..!
குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வங்கி கணக்குகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை கைவிட பொதுத்துறை வங்கிகள் முடிவு செய்துள்ளன. ஏற்கனவே, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் இந்தியன் வங்கி இதை அமல்படுத்தி விட்டன. குறைந்தபட்ச இருப்பு தொகைக்கு பதிலாக, டெபிட் கார்டு, ஏ.டி.எம்.,மில் கூடுதல் பரிவர்த்தனைக்கான சேவைக் கட்டணம் போன்றவற்றின் வாயிலாக, வருவாய் பெற திட்டமிட்டுள்ளன.
வங்கிகளில், நிகர லாபத்தை விட கூடுதலாக அபராத கட்டணம் வசூலித்தது குறித்த தகவல் வெளியானது மற்றும் மத்திய நிதி அமைச்சக கூட்டங்களில் எழுப்பப்பட்ட விமர்சனங்கள் ஆகியவற்றால், குறைந்தபட்ச இருப்புத் தொகைக்கு அபராதம் விதிப்பதை கைவிட பொதுத்துறை வங்கிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது