1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு..!

1

ராஜஸ்தானின் டவுசா மாவட்டம் பாண்டூகி என்ற இடத்தில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்த போது இரண்டரை வயது பெண் குழந்தை அங்கு இருந்த 35 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மேலாண் மீட்புப் படையினர், தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இது தொடர்பாக மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், 

சுமார் 15 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியிருந்தது. குழந்தை விழுந்த இடத்தின் பக்கத்து நிலத்தில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் பணிகள் நடந்தது.   மேலும் குழாய் மூலம் ஆக்சிஜன் சப்ளை கொடுக்கப்பட்டு, கேமரா மூலம் குழந்தை கண்காணிக்கப்பட்டு வந்தது. 

நேற்று முன்தினம் இரவு முதல் அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வந்தது.  இந்நிலையில் 18 மணி நேர போராட்டத்துக்குப் பின் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   

Trending News

Latest News

You May Like