குட் நியூஸ்..! சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..!
சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டுகளுக்கான சட்டப் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. 2025-2026 சட்டப் படிப்பிற்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைந்திருக்கும் அனைத்து சட்டக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டப் பள்ளிகள் அனைத்திலும் சட்டப் படிப்பு சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 3 ஆண்டுகள் எல்எல்பி மற்றும் 3 ஆண்டுகள் எல்எல்பி (ஹானர்ஸ்) சட்டப் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு ஜூலை 25 ஆம் தேதி, மாலை 5:45 மணி வரை விண்ணப்பிக்கலாம். சட்டத் துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் இந்த அரிய வாய்ப்பைப் தவறாது பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், www.tndalu.ac.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்”.
தகுதி மற்றும் விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட மற்ற விவரங்கள் ஆன்லைனில் கொடுக்கப்பட்டுள்ளன. முன்னதாக மாணவர் சேர்க்கை தேதி முடிவடைந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.