1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இனி அழகர்கோவில், மருதமலையில் நாள் முழுவதும் அன்னதானம்..!

1

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20 ஆம் தேதி தொடங்கியது. மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சேகர்பாபு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

1. ரூபாய் 85 கோடி அரசு நிதியில் ஒருகால பூசைத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 17,000 திருக்கோயில்களின் வைப்புத்தொகை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 2.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

2. திருக்கோயில்களில் புதியதாக தொடங்கப்பட உள்ள 100 புத்தக விற்பனை நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு தொகுப்பூதிய பணிநியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.

3. ரூபாய் 177.10 கோடியில் 6 திருக்கோயில்களில் பக்தர்களுக்கான ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்.

4. 1000 திருக்கோயில்களின் அர்ச்சகர்களுக்கும் மாத உதவித்தொகை ரூ.1000 வழங்கப்படும்.

5. ரூபாய்1.58 கோடியில் அறுபடை வீடுகளுக்கு ஆன்மிகப் பயணம் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த ஆண்டு 1000 மூத்த குடிமக்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

6. ரூ.1.05 கோடி அரசு நிதியில் 420 மூத்த குடிமக்கள் இராமேஸ்வரம் - காசி ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

7. ரூ.11.50 கோடியில் நான்கு திருக்கோயில்களில் புதிய வெள்ளித்தேர்கள் செய்யப்படும்.

8. பொருளாதாரத்தில் பின்தங்கிய 700 இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பில் 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.60 ஆயிரம் மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும். மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.60,000/- மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கப்பட்டு திருக்கோயில் மண்டபங்களில் கட்டணமின்றி திருமணம் நடத்தப்படும்.

9. ரூ.3.75 கோடியில் வள்ளலார் அவதரித்த இல்லம் மறுசீரமைப்பு செய்யப்படும்.

10. 300 அரிய ஆன்மிகப் புத்தகங்கள் பதிப்பகப் பிரிவின் மூலம் மறுமதிப்பு செய்து வெளியிடப்படும்.

11. ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கும் தலா 1000 பக்தர்கள் கட்டணமின்றி அழைத்து செல்லப்படுவார்கள்.

12. ரூபாய் 9 கோடியில் இரண்டு திருக்கோயில்களில் புதிய தங்கத்தேர்கள் செய்யப்படும்.

13. சென்னை மாநகர் மற்றும் சென்னை புறநகரில் ரூ.50 கோடியில் 115 திருக்கோயில்களில் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தப்படும்.

14. பழனி, அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் சார்பாக நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு இவ்வாண்டு முதல் மதிய உணவும் வழங்கப்படும்.

15. ஒரு வேளை அன்னதானம் வழங்கும் திட்டம் இந்த ஆண்டு 6 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும். நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் மதுரை அழகர் கோவில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட 5 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

16. ஒருகால பூசைத் திட்டம் இந்த ஆண்டு விரிவுபடுத்தப்பட்ட ஆயிரம் திருக்கோயில்களின் அர்ச்சர்களுக்கும் மாத உதவித்தொகை ரூ.1000 வழங்கப்படும்.

17. நிதி வசதியற்ற திருக்கோயில்களில் குறைந்த மாத ஊதியம் பெற்று வரும் இசைக்கலைஞர்களுக்கு மாதம் ரூ.10,000 தொகுப்பூதியம் வழங்கப்படும்.

18. ரூ.970 கோடியில் 1,014 திருக்கோயில்களில் 1,240 திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

19. ரூ.15 கோடியில் 35 திருக்கோயில்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

20. ரூபாய் 44 கோடியில் 23 திருக்கோயில்களில் புதிய வணிக வளாகங்கள் கட்டப்படும்.

21. ரூ.17 கோடியில் 26 திருக்கோயில்களில் முடிக்காணிக்கை மண்டபம், உணவருந்தும் கூடம், இளைப்பாறும் மண்டபம், விருந்து மண்டபம், சஷ்டி மண்டபம், சுற்றுப்பிரகார மண்டபம், பொங்கல் மண்டபம் மற்றும் வாகன மண்டபங்கள் புதியதாக கட்டப்படும்.

22. நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் 5 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

Trending News

Latest News

You May Like