1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! சென்னை அம்மா உணவகங்களில் இன்று, நாளை இலவச உணவு..!

Q

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ள எக்ஸ் வலை தள பதிவின் விவரம் வருமாறு;
நேற்று அதிக அளவில் பெய்த வட கிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை - எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்.
இவ்வாறு தமது எக்ஸ் தள பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.


 

Trending News

Latest News

You May Like