1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! அடுத்த ஆண்டு அமலாகும் AI பாடத்திட்டம்..!

1

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி என்பது உலகில் அளவில் முதன்மையாக பார்க்கப்படுகிறது. தொழில்கள், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தின் உபயோகம் தொடங்கிவிட்டது. இதன் காரணமாக செய்ற்கை நுண்ணறிவு உபயோகத்தை குறித்து அனைத்து துறை ஊழியர்களும் அறிந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், செய்ற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து பள்ளி முதலே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இதனைக்கருத்தில் கொண்ட தமிழக அரசு, தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு செய்றகை நுண்ணறிவு குறித்து பாடப்புத்தகங்களில் கொண்டுவர முடிவெடுத்தது. இதற்கான மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை உருவாக்கிட குழு அமைக்கப்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதற்கான பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், அடுத்த கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனையடுத்து, இதுகுறித்து பேசிய பள்ளி கல்வித்துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் கணினி அறிவியல் மற்றும் செய்ற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என கூறினார்.

இதற்கான பாடத்திட்ட மாற்றங்கள் முன்னணி தகவல் தொழிலுநுட்ப நிறுவனங்களின் உதவியோடு செய்யப்பட்டதாக தெரிவித்தார். மேலும், 15 நாட்களில் அதற்கான பணிகள் முடிவடையும் எனவும் கூறினார்.

பள்ளி கல்வியை நவீனப்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் 6000 மேலான மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இவையில்லாமல், 500 அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் உயர் தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும், 2000 மேற்பட்ட ஆரம்ப பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன.

நவீனமயமாக்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப பயிற்சி அளிப்பது சவாலானது என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ். கண்ணன் கூறியுள்ளார். ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உதவ முன்வர வேண்டும் என கூறினார். பள்ளி கல்வியில் செயற்கை நுண்ணறிவு குறித்து கொண்டு வரப்படுவதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 

Trending News

Latest News

You May Like