1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! சினிமாவை தொடர்ந்து ஓடிடி தளங்களுக்கு வருது சென்சார் - எல்.முருகன்..!

1

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், "புதிய ஒளிபரப்புக் கொள்கை மூலம் ஓடிடிக்கு சென்சார் கொண்டு வரப்படும். கோவாவில் நவம்பர் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை 8 நாட்கள் சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது." என்றார்.

மேலும் பேசிய அவர், "ஜம்மு காஷ்மீரில் நடந்த உண்மைச் சம்பவத்தையே அமரன் படத்தில் காட்டியுள்ளனர். அமரன் படத்தில் தவறாக எதையும் சித்தரிக்கவில்லை. அமரன் போன்ற நல்ல படங்களை வரவேற்பது நாட்டின் மீது நாம் வைத்துள்ள மரியாதைக்கு அடையாளம். நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் சினிமாவின் தேவை இன்று அதிகரித்து உள்ளது. ஒரே நாடு, ஒரே சினிமா. வடக்கு தெற்கு என்ற பேதம் இல்லாமல் சினிமா துறையை ஆக்கப்பூர்வமாக கொண்டு செல்ல பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சென்னை மற்றும் பெங்களூரில் தற்போது ஹாலிவுட் படங்களுக்கு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இது இன்னும் அதிகரிக்க வேண்டும்.

தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்களை தணிக்கை செய்வதற்கு என்று சென்சார் போர்டு உள்ளது. இங்கு தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் பெற்ற பிறகே, அனைத்து படங்களும் திரையரங்குகளில் வெளியாகும். சென்சாரின் போது அதிக வன்முறை, ஆபாசக்காட்சிகள், கலவரத்தை தூண்டும் வகையிலான காட்சிகள் நீக்கப்படும்.

தற்போது ஓடிடி தளங்கள், மக்கள் மத்தியில் பரவலாகி உள்ளன. ஏராளமான படங்கள், வெப் சீரிஸ்கள் அதில் வெளியாகி வருவதால், அதில் ஆபாச காட்சிகள், வன்முறை காட்சிகளை தடுக்கும் வகையில் ஓடிடிக்கும் சென்சார் கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், ஓடிடி தளங்களுக்கு சென்சார் வரும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறி இருக்கிறார்.

Trending News

Latest News

You May Like