1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! நாளை முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மெட்ரோ ரயில் சேவை..!

1

மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ இரயில் பயணிகளின் வசதிகாக மாலை நெரிசல்மிகு நேரத்தில் இவக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவை, நாளை 09.11.2023 (வியாழக்கிழமை), 10.11.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 11:11:2023 (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில் இரவு 8.00 மணி முதல் 10:00 மணி வரை மெட்ரோ இரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9  நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ இரயில் சேலையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவை நவம்பர் 09 முதல் நவம்பர் 11 வரை ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டுமே என்பதை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துக்கொள்கிறது. 

1

Trending News

Latest News

You May Like