குட் நியூஸ்..! இன்று கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கம்..!

தமிழகத்தில் அக். 7 (சனிக்கிழமை) மற்றும் அக். 8 (ஞாயிறு) வார இறுதி நாட்களில் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை ஆகும். அதனால் சென்னையில் இருந்து பிற இடங்களுக்கு கூடுதலான பயணிகள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக அரசு போக்குவரத்து கழகம் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில், சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு அக். 6 அன்று செல்ல, கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதே போல கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களுக்கும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 600 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்ள இதுவரை 5896 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர்