குட் நியூஸ்..! தமிழகத்தில் 50 அரசுப் பள்ளிகளை பசுமைப் பள்ளிகளாக மாற்றப்படும்..!

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன், தமிழகத்தில் இந்தாண்டு கூடுதலாக 50 அரசு பள்ளிகள் பசுமை பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்துவது வெகுவாக குறைந்துள்ளது.
மாணவர்களுக்கு விரைவில் உலோகத்தால் ஆன தண்ணீர் பாட்டில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தமிழகத்தில் 53 இடங்களில் குப்பை கிடங்குகள் பயோமைனிங் மூலம் அகற்றப்பட்டு உயிர் நிலங்களாக மீட்கப்பட்டுள்ளது.
காவிரி, தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.1,885 கோடியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களிடம் கூறினார்.