1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! ஆயுத பூஜை விடுமுறைக்கு 4000 சிறப்பு பேருந்துகள்..!

1

வார இறுதி என்றாலே வெளியூர் பயணம் செல்லும் பொதுமக்களால் பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதும். கூடவே பண்டிகையும் வந்துவிட்டால் கூட்ட நெரிசலுக்கு பஞ்சமிருக்காது.

குறிப்பாக வரும் வார இறுதியை எடுத்து கொண்டால் அக்டோபர் 21 (சனி), 22 (ஞாயிறு), 23 (ஆயுத பூஜை & சரஸ்வதி பூஜை), 24 (விஜயதசமி) என தொடர்ந்து நான்கு நாட்கள் அரசு விடுமுறை வருகிறது.

இந்நிலையில் வார இறுதி மற்றும் ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி 4 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) அறிவித்துள்ளது. இது வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் உடன் கூடுதலாக இயக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது. 

மேற்குறிப்பிட்ட 4 ஆயிரம் சிறப்பு பேருந்துகளில் 2,265 பேருந்துகள் சென்னை கோயம்பேடு மற்றும் இரண்டு பேருந்து நிலையங்களில் இருந்து புறப்பட்டு செல்லும்.

தாம்பரத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள் திண்டிவனம், திருவண்ணாமலை, நெய்வேலி, புதுச்சேரி, சிதம்பரம் வழியாக செல்லும். அதுவே வேலூர், ஆரணி, ஆற்காடு, திருத்தணி, ஓசூர் செல்லும் பயணிகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எஞ்சிய 1,735 பேருந்துகள் மதுரை, கோவை, சேலம், திருச்சி, பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து சென்னை மற்றும் அதனை அண்டை நகரங்களுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆயுத பூஜை விடுமுறை முடிந்து மீண்டும் திரும்பும் வகையில் 24, 25 ஆகிய தேதிகளில் மேற்குறிப்பிட்ட அதே வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like