1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! 25,000 பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வேலை..!

1

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் ஆயிரம் சிவில் சர்வீசஸ் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யப்படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 25,000 பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வேலை கிடைத்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

12ஆம் வகுப்புக்கு பிறகு இடைநிற்றலை குறைக்கும் விதமாகவும் ‘நான் முதல்வன்’ திட்டத்தை தமிழக அரசு தொடங்கியது. அத்துடன் பள்ளிகள் பள்ளிகள் அளவில் வாழ்க்கை வழிகாட்டி ஆலோசகர்கள் அடங்கிய ஒரு குழு உருவாக்கப்பட்டது.

இதன் மூலமாக பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் தங்களுடைய விருப்பப்படி, உயர் கல்வியை தேர்ந்தெடுக்கவும், விண்ணப்பப் படிவங்களை நிரப்பவும் உரிய வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையப் பணியாளர் தேர்வாக்கான பயிற்சி மற்றும் யுபிஎஸ்சி தேர்வு எழுதுவதற்கு பொருட்களை பெற உதவிகள் வழங்கப்படுகின்றன. அத்துடன், பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை கிடைக்க அரசு உதவுகிறது.

இதுவரை 252 கல்லூரிகள் வேலைவாய்ப்பு இயக்கங்களில் பங்கேற்றுள்ளன. இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இன்னும் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், அவர்கள் தற்போது இறுதியாண்டில் படித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு ஓலா எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம், பாலிடெக்னிக் மாணவர்களை வேலைக்குச் சேர்க்கிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் அறிக்கையின்படி, 120க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் அசெம்பிளி லைன், லாஜிஸ்டிக்ஸ், ஆபரேஷன்ஸ் மற்றும் ஸ்டோர்ஸ் போன்றவற்றில் தேர்வு செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் Accenture, Amazon, Ashok Leyland, BOSCH, Caterpiller India, Daikin, Delphi TVS, Eicher, Ford, HCL Tech மற்றும் L&T உள்ளிட்ட நிறுவனங்களும் பாலிடெக்னிக் மாணவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன. இந்த மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


 

Trending News

Latest News

You May Like