குட் நியூஸ்..! 2,045 ரேசன் கடைகளுக்கு சொந்த கட்டிடம்..!

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, சேதுபாவாசத்திரம், கொளக்குடி ஊராட்சியில் முழுநேர நியாய விலைக்கடைக்கு கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கப்படுமா என்று சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கேள்வி எழுப்பினார். அதேபோல், துணை சபாநாயகர் பிச்சாண்டி கீழ் பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட துணை கிராமங்களில் நியாய விலைக்கடைகள் இல்லாத காரணத்தில் 2 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கடைகளுக்குச் சென்று வாங்க வேண்டிய நிலை இருப்பதாக கூறியவர், தமிழகம் முழுவதும் பகுதிநேர நியாயவிலைக் கடைகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.
இந்தக் கேள்விகளுக்கு பதில் அளித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், தமிழகத்தில் உள்ள 34,902 ரேஷன் கடைகளில், 6,218 ரேஷன் கடைகள் தனியார் மற்றும் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் 2,545 கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருவதாகவும், அனைத்து கடைகளுக்கும் சொந்தக் கட்டிடம் கட்டும் பணியை மேற்கொள்ளப்படும் என்று பதில் அளித்தார்.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 34,902 ரேஷன் கடைகளில் 6,218 கடைகள் வாடகை கட்டிடங்களில செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.