குட் நியூஸ்..! தீபாவளி பண்டிகையையொட்டி 15,000 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு..!

தமிழகத்தில் பண்டிகை தினம் மற்றும் வார இறுதி நாட்களில் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும், ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட்களை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், டிக்கெட் முன்பதிவு சில மணி நேரத்திலேயே முழுமையாக முடிவடைந்த நிலையில் பல்வேறு பயணிகள் சிறப்பு பேருந்து புக்கிங்கிற்காக காத்து கொண்டிருக்கின்றனர். மேலும், ஆம்னி பேருந்து புக்கிங்கும் ஓரளவுக்கு முடிவடைந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் சிறப்பு பேருந்து குறித்த அறிவிப்பிற்காக காத்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மொத்தமாக 15,000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதே போல, இந்த ஆண்டும் 15,000 சிறப்பு பேருந்துகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயங்குவது தொடர்பான அறிவிப்பு அக்.28 ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.