1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..!! இன்று முதல் 300 நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனை..!

1

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தங்காளியின் விலை விண்ணைத்தொடும் அளவுக்கு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதற்கு காரணம், வெளிமாநிலங்களில் தக்காளி வரத்து குறைவு என கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் போதுமான அளவுக்கு விளைச்சல் இல்லை என்றும் கூறப்படுகிறது. 

 தக்காளி விலை கிலோ 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  தக்காளி விலை உயர்வு காரணமாக, இல்லத்தரசிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். இதுமட்டுமின்றி, மற்ற காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.  இதனால், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த, தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்து, குறைந்த விலையில் ரேஷன் கடைகள், பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என பொதும்க்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் உழவர் சந்தைகளில் தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்டவற்றை அதிக அளவில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள் மூலம் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்றவை குறைவான விலையில் விற்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும், விலை ஏற்றத்தை கருத்தில் கொண்டு அத்தியாவசிய பொருட்களை பதுக்குதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தக்காளி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில்  தமிழ்நாடு முழுவதும் 300 நியாய விலை கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை செய்ய கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில்,  ஏற்கனவே சென்னையில் உள்ள நியாய விலை கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில்,  இனிமேல் தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி   தமிழ்நாடு முழுவதும் இன்று (12ந்தேதி()  முதல் மேலும் 300 நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவு துறை அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like