1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..!! விரைவில் சென்னை டூ நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை..!

1

வந்தே பாரத் ரயில் இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் ஒரு குறுகிய தூர ரயில் சேவையாகும் .வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளை கொண்டது என்றே சொல்லலாம். முழுவதும் ஏசி வசதி, சாய்வு இருக்கைகள், பயோ டாய்லட், விசாலமான ஜன்னல் கண்ணாடிகள், வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, தானியங்கி கதவும் என பல வசதிகள் உள்ளன. வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை ரயில் என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும். வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து வெளித்தோற்றத்திலும் மாறுபட்டதாக வந்தே பாரத் ரயில்கள் உள்ளன.

Vande Bharath

தமிழ்நாட்டில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு வழியாக மைசூர் வரையிலும், சென்னையில் இருந்து கோவைக்கும் என இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்னும் பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயிலை அறிமுகம் செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில், சென்னை - நெல்லை வழித்தடத்திலும் வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. தென் மாவட்ட ரயில் பயணிகளின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை இந்த ரயில் ஏற்படுத்தியுள்ளது.

Vande Bharat

இந்த நிலையில், மதுரை மற்றும் நெல்லை ரயில் நிலையங்களில் வந்தே பாரத் ரயிலை நிறுத்தி பராமரிக்க, பராமரிப்பு லைனில் மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகளை மேற்கொள்ள தெற்கு ரயில்வே டெண்டர் வெளியிட்டுள்ளது. ரூ.5 கோடி மதிப்பிலான இந்த பணிகளை மூன்று மாதத்தில் முடிக்க நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிந்ததும் சென்னை - மதுரை - நெல்லை தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Trending News

Latest News

You May Like