1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..!! மகளிர் உரிமை தொகைக்கான இறுதி பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரம்..!

1

மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்று, கடந்த 2 வருட காலமாகவே, பெரும் எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டே இருந்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

இதையடுத்து, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவேற்றும் முகாம்கள் நடைபெற்றது. இதுவரை தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 63 லட்சம் மகளிரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி வழியாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

1000

தகுதியான குடும்ப தலைவிகளை தேர்ந்தெடுக்க வீடு வீடாக கள ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் இரண்டு நாட்களுக்குக்குள் முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் கள ஆய்வின் போது சேகரிக்கப்படும் விவரங்கள் அனைத்தும், தமிழ்நாடு அரசின் தரவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு வருகிறது.

இந்த பணிகள் அனைத்தையும் வரும் 5-ம் தேதிக்குள் முடித்து, தகுதியானவர்கள் பட்டியலை தயாரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் விண்ணப்பத்திலிருக்கும் சந்தேகங்களை விண்ணப்பதாரர்களிடமே தொடர்பு கொண்டு சரிசெய்யும் பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

1000

இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின், விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா? என்பது குறித்து விண்ணப்பதாரருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like