1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..!! பொங்கல் வேட்டி, சேலை உற்பத்தி செய்ய அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு.!

1

தமிழகத்தில்  பொங்கல் பண்டிகையின் போது நியாய விலை கடைகளின் மூலமாக பொதுமக்களுக்கு விலையில்லா வேட்டி,  சேலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில்  விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம் , விலையில்லா  சீருடை வழங்கும் திட்டம் மற்றும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையான நூல்களை கொள்முதல்  செய்யும் பொருட்கள் இயக்கும் நிலை குழுவினை தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்த புள்ளிகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2000படி அமைத்து ஆணைகள் வெளியிடப்பட்டு வருகின்றனர்.  

tn

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஒட்டி இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தும் நோக்கில் இலவச வேட்டி சேலைகளை உற்பத்தி செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.  அனுமதி அளித்துள்ளதுடன் முன்பணமாக 200 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. 2024 பொங்கலுக்கு வழங்கவுள்ள வேட்டி, சேலை திட்டத்திற்கு உத்தேச உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்து  வழங்கிட ஆணையிட்டுள்ள நிலையில் வேட்டி, சேலலையை விநியோகிக்கும் நடைமுறையை முடிவு செய்ய கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது . அத்துடன் ரேசன் கடைகளில் வேட்டி, சேலைகளை வழங்கும் போது விரல் ரேகை பதிவு கட்டாயம்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like