குட் நியூஸ்..!! தமிழகத்தில் 5,000 கிராம பஞ்சாயத்துகளில் செப்டம்பர் முதல் பாரத்நெட் இணைய வசதி..!

தற்பொழுது உள்ள காலக்கட்டத்தில் எந்த இடத்திற்கு சென்றாலும் சரி எந்த செயலை செய்தாலும் சரி அனைத்திற்கும் இணைய சேவை தேவைப்படுகிறது. ஆனால் இந்த இணைய சேவையானது சிட்டி உள்ள மக்களுக்கு எளிய முறையில் கிடைத்து விடுகிறது. ஆனால், கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு இந்த இனைய சேவையானது எளிதில் கிடைக்காமல் போய்விடுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆண்டு பாரத்நெட் வசதியை தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளுக்கு பாரத்நெட் இணைய வசதியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் இதுவரை 4,100 கிராம பஞ்சாயத்துகளுக்கு பாரத்நெட் இணைய வசதிக்கான இணைப்பு வழங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 5,000 கிராம பஞ்சாயத்துகளுக்கான பாரத்நெட் இணைய வசதிக்கான இணைப்பு வழங்கப்பட்டு செப்டம்பர் மாதம் முதல் இணைய வசதியை தொடங்குவதற்கான சூழல் நிலவியுள்ளது. எஞ்சியுள்ள 7,525 கிராமங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் இணைய வசதியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலமாக இந்த இணைய வசதி மிக குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட உள்ளது.
முதல் கட்டமாக 5000 கிராம பஞ்சாயத்துகளுக்கு பாரத்நெட் இணைய வசதிக்கான இணைப்பட இருப்பதாகவும் செப்டம்பர் மாதம் முதல் இந்த இணைய வசதி தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.