1. Home
  2. தமிழ்நாடு

குட் லக் மச்சான்... ஆர்யா படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டு வாழ்த்திய நடிகர் கார்த்தி..!

Q

நடிகர் ஆர்யா தற்போது 'மிஸ்டர் எக்ஸ்' எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து சார்பட்டா இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளார்.
ஆர்யாவின் 36-வது பட அறிவிப்பு அப்டேட் நேற்று முன்தினம் வெளியானது. மினி ஸ்டூடியோஸ் வினோத் குமார் தயாரிக்கும் இப்படத்தை 'ரன் பேபி ரன்' படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார்.எம்புரான் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதிய முரளி கோபி இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். காந்தாரா படத்தின் இசையமைப்பாளர் அக்னிஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் ஆர்யாவின் 36வது படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை நடிகர்கள் கார்த்தி மற்றும் விஷால் வெளியிட்டனர். இப்படத்திற்கு, 'அனந்தன் காடு' எனப் பெயரிட்டுள்ளதை இன்று டீசர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் நிகிலா விமல், இந்திரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like