மிக்ஜம் புயல் மீட்பு பணிக்காக நிதி வழங்கிய நல் உள்ளங்கள்..!
மிக்ஜம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம். இச்சூழலில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட வேண்டுமென்று உங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மிக்ஜம் புயல் நிவாரண நிதி எவ்வாறு அனுப்புவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது அதில், மிக்ஜம் புயல் பாதிப்பு - ஜிபே, பேடிஎம் மூலம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு tncmprf@iob என்ற ஐடி-மூலம் நிவாரண நிதி அனுப்பலாம். வங்கி இணைய சேவை, கடன் அட்டை மூலம் https://cmprf.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பணம் அனுப்பலாம். ஐஓபி தலைமை செயலக கிளை கணக்கு எண் : 117201000000070 என்ற எண்ணிற்கும் நிதி அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'மிக்ஜாம்' புயல் மழை மீட்பு பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ₹1 லட்சம் வழங்கும் கவிஞர் வைரமுத்து!
மிக்ஜாம் புயல் மழை மீட்பு பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ₹10 லட்சம் வழங்கினார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்
'மிக்ஜாம்' புயலால் பாதிக்கபட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, உதகையில் இருந்து பால் பவுடர், டீ தூள், ஊட்டி வர்க்கி போன்ற ₹1.77 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு.
'மிக்ஜாம்' புயல் நிவாரண நிதியாக 3 கோடி வழங்கியது அசோக் லேலண்ட் நிறுவனம்!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு உதவ, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தஞ்சையை சேர்ந்த ஜோதி அறக்கட்டளை சார்பில் ₹1 லட்சம் வழங்கப்பட்டது.
புயல் நிவாரணத்துக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
காங்கிரஸ் எம்எல்ஏக்களும் ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக அறிவிப்பு!
'மிக்ஜாம்' புயல் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு டிவிஎஸ் நிறுவனம் ரூ.3 கோடி வழங்கியுள்ளது.
'மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு வழங்க, கோவையில் இருந்து ₹2.5 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைப்பு.
மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ₹1 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கிய PSG குழும நிர்வாகிகள்!