1. Home
  2. தமிழ்நாடு

’குட் பேட் அக்லி’ படத்தின் புதிய அப்டேட்!

1

நடிகர் அஜித் தற்போது நடித்துவரும் திரைப்படம் “குட் பேட் அக்லி”. இப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதமே தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது.

இதன் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிப்பதாக சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், சுனில்,அர்ஜீன் தாஸ் உட்பட பலர் முக்கிய வேடங்களிலும், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அஜித் ரசிகர்களுக்கு சிறப்பான செய்தி ஒன்றினை தெரிவித்துள்ளார் பிரபல நடிகர் ஒருவர்..

அவர்தான் நடிகர் பிரசன்னா.. குட் பேட் அக்லி திரைப்படம் குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ள பிரசன்னா.. ”அஜித் சாரின் GOOD BAD UGLY படத்தில் நடிக்கிறேன். தல படத்தில் என்னை பார்க்க விரும்பிய பலரின் ஆசை கடைசியாக நிறைவேறியது. இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது. சில தினங்களாக தான் படப்பிடிப்பில் கலந்திருக்கிறேன். ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன், அவர் (அஜித்) பணிவும், தன்னடக்கமும் நிரம்பிய மனிதர்.” என்று பதிவிட்டுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like