பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு ரத்து..!
பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மலைக் கோவிலில் சாமி தரிசனம் செய்ய படிப்பாதை, யானை பாதை, ரோப் கார் சேவை மின் இழுவை ரயில் ஆகியவை இருப்பதினால் மாற்றுத்திறனாளிகளும் முதியவர்களும் மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் சேவையின் மூலம் மலைக் கோவிலில் சாமி தரிசனம் செய்கின்றனர்.
ஆண்டுதோறும் பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா தொடங்கியுள்ளது.
கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். தினந்தோறும் மாலை 6 மணிக்கு பெரிய நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் இரவு 7 மணிக்கு அலங்காரம் நடைபெற இருக்கின்றது, மேலும் கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
12ஆம் தேதி விஜயதசமி அன்று பழனி முருகன் கோவிலில் இருந்து பராசக்தி வேர் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது, முத்துக்குமாரசாமி தங்க குதிரை வாகனத்தில் கோதை மங்கலம் சென்று வில் அம்பு போடும் நிகழ்ச்சியும் நடைபெறும். நவராத்திரி விழாவை முன்னிட்டு வரும் 12ஆம் தேதி வரை பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.