ஆட்டத்தை ஆரம்பித்த தங்கம்..! மீண்டும் தங்கம் விலை உயர்வு..!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ஆபரணத் தங்கத்தில் விலையில் புதிய மாற்றம் ஏற்பட்டது. இதற்கு முன் இல்லாத அளவு, தங்கத்தின் விலை ஏறியதால் நகை வாங்குபவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை சற்று குறைந்து ஒரு கிராம் ரூ. 7,355-க்கும், ஒரு சவரன் ரூ. 58,840-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் இன்று (நவ.6ஆம் தேதி) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.58,920க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,365க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.105க்கும், ஒரு கிலோ ரூ.1,05,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.