தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு !!
தங்கம் விலை காலையில் கிடுடுவென உயர்ந்துள்ளது. தீபாவளி உள்ளிட்ட விஷேச தினங்கள் வரும் வேளையில் தங்கம் விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தங்கத்தின் விலை இன்றைய காலை நிலவரப்படி சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,184 க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 17 ரூபாய் உயர்ந்து, ரூ.4,773 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 66,300 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் உயர்ந்து ரூ. 66,400 க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. ஆகஸ்ட் 7ம் தேதி ஒரு சவரன் 43,328க்கு விற்கப்பட்டது தங்க விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலையாகும். அதன் பிறகு கடந்த 2 மாதங்களாக தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
newstm.in