தங்கம் விலை : 'கிடுகிடு' உயர்வு..!

தங்கத்தின் விலையானது வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு ஒரு சவரன் 18ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை 2025ஆம் ஆண்டில் 60ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 540-க்கும், ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்து 320-க்கும் விற்பனை ஆனது. நேற்று கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 510-க்கும், ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று தங்கத்தின் விலையானது கிடு கிடுவென அதிகரித்துள்ளது. அந்த வகையில் கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 7,595 ரூபாய்க்கும், சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து 60ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.104-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
28-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,080
27-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,320
26-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,440
25-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,440
24-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.60,440