நடுத்தர மக்கள் கலக்கம் : ஒரே நாளில் 2 ஆவது முறையாக உயர்ந்த தங்கம் விலை..!
சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.
அந்த வகையில் நேற்று, காலை மற்றும் பிற்பகல் என இருமுறை மொத்தம் ஆயிரத்து 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 91 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து 91 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் இன்றும் மாலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாலையில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.91,400 என்ற புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.11,425-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 10 மாதங்களில் மட்டும் ரூ.31 ஆயிரத்திற்கு மேல் விலை உயர்ந்திருக்கிறது. தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்திருப்பது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
.png)