இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்..!
நேற்று முன்தினம், நேற்று என 2 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து நகைப்பிரியர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று காலையில் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து இருந்த நிலையில் மாலையிலும் ஒரு சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து விற்பனையானது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த நிலையில் நேற்றும் இருமுறை உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ரூ.85,120-க்கு விற்பனையானது.
தங்கம் விலையை பொறுத்தவரை இதுவரை இல்லாத அளவிற்கு மிகக் கடுமையாக உயர்ந்து வருகிறது. போகிற போக்கை பார்த்தால் இந்த ஆண்டு முடிவதற்குள் தங்கம் விலை ஒரு சவரன் 1 லட்சம் தொட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்று சொல்லும் அளவிற்கு தங்கம் விலையானது மிகக் கடுமையாக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக கடந்த சில வாரங்களாக தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு முந்தைய நாள் சாதனையை முறியடித்து வருகிறது. டொனால்டு டிரம்ப் விதித்த வர்த்தக வரி விதிப்பு, உலக அளவில் நிலவும் போர் பதற்றம், தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பது போன்றவற்றால் தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் கூறி வருகிறார்கள்.
இந்த ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1ம் தேதி கிராமுக்கு ரூ.7,150 ஆகவும், பவுனுக்கு ரூ.57,200 ஆகவும் தங்கம் விற்பனை ஆனது. ஆனால் வெறும் 9 மாதங்களில் சவரனுக்கு 25 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்து அதிர வைத்துள்ளது தங்கம் விலை. தற்போது திருமண சீசன், பண்டிகை நாட்கள் நெருங்கி வருவதால் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆனால், விலை தொடர்ந்து அதிகரித்து வருவது தங்க நகை பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விலை குறையும் என காத்திருந்தால் இப்படி, ஜெட் வேகத்தில் உயர்ந்து அதிர வைத்துவிட்டதே... என நினைத்துக்கொண்டே தங்கம் வாங்குவதையும் பார்க்க முடிகிறது.
நேற்று முன்தினம் மட்டும் தங்கம் விலை 2 முறை உயர்ந்தது நகை பிரியர்களை அதிர வைத்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை மாலை நிலவரப்படி ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.83,440 க்கு விற்பனையானது. கிராம் ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,360 ஆக விற்பனையானது.
இதேபோல் நேற்று காலை தங்கம் விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சம் தொட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.560 வரை உயர்ந்து ரூ.84 ஆயிரத்தை தொட்டது. அதேபோல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.70 வரை உயர்ந்து ரூ.10,500க்கு விற்பனையானது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வரக்கூடிய சூழலில், நேற்றும் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.
.png)