தங்கத்தின் விலை 2 ஆவது நாளாக குறைவு - வெள்ளி கிடு கிடு உயர்வு
தங்கத்தின் விலை 2 ஆவது நாளாக குறைவு - வெள்ளி கிடு கிடு உயர்வு

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை கடந்த இரண்டு தினங்களாக குறைந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 56 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,872க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு 7 ரூபாய் குறைந்து, ரூ.4,734 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 64,300 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 900 உயர்ந்து 65,200 விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், தங்கம் விலை இறங்கி வருவது தங்கம் வாங்குவோர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in
Next Story