அதிரடியாக குறைந்த தங்கம் விலை..நகை வாங்க இதுதான் சரியான நேரம்..!
கடந்த 11 நாட்கள் தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வந்த நிலையில், நேற்று அதிரடியாக உயர்ந்தது.
நேற்று ஆகஸ்ட் 21ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,230க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.73,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அந்த வகையில் இன்று ஆகஸ்ட் 22ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,215க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.73,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.7,620க்கும் சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.60,960 விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் 128 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,28,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.