1. Home
  2. தமிழ்நாடு

வாரத்தின் முதல் நாளே குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்..!

Q

தங்கத்தின் விலை கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 130-க்கும், ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 40-க்கும் விற்பனை ஆனது. கடந்த 7-ந்தேதி நிலவரப்படி, கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 980-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.72 ஆயிரத்துக்கு கீழ் வந்துவிட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.71 ஆயிரத்து 640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.8,955-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
08-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840
07-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840
06-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040
05-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040
04-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,720

Trending News

Latest News

You May Like