வாரத்தின் முதல் நாளே சரிந்த தங்கம் விலை; சவரன் ரூ.79,760க்கு விற்பனை..! .!
தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை கடந்து விற்பனையாகியது. கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.1,600 அதிகரித்திருந்தது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று கொஞ்சம் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.79,760க்கு விற்பனையாகி வருகிறது. இதன்மூலம், தங்கம் விலை ரூ.80 ஆயிரத்திற்கு கீழ் சரிந்துள்ளது. அதேபோல, கிராமுக்கு, ரூ.35 குறைந்து, 9,970க்குக்கு வர்த்தகமாகி வருகிறது.
.png)