தங்கம் விலை மேலும் குறைவு - நகை வாங்க இது நல்ல நேரமா?

தமிழகத்தில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. நேற்றைய முன்தினம் சவரன் ரூ.840 அதிகரித்து, ரூ.72160 ஆக விற்பனையானது. (ஜூலை 02) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,520க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ரூ.45 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.9065க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று (ஜூலை 03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.72,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,105க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் அதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை.
இன்று சவரனுக்கு ₹440 குறைந்தது. இதனால், 22 கேரட் ஒரு கிராம் ₹9,050-க்கும், சவரன் ₹72,400-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு ₹1 குறைந்து ₹120-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,20,000-க்கும் விற்பனையாகிறது.